தி.மு.க., அரசியல் நாடகங்களை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை: அண்ணாமலை

சென்னை: தி.மு.க.,வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
@1brஇதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு;
இன்றைய தினம், விருது நகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, தி.மு.க., நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் தி.மு.க., அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். அங்கிருந்த அருப்புக்கோட்டை பா.ஜ., வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சகோதரி மீனா இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார் அமைச்சர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள்.
தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, தி.மு.க., எம்.பி., கனிமொழியிடம், மத்திய அமைச்சர் பார்லி.யில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க.
தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தி.மு.க., ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பல முறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் தி.மு.க.,வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
venugopal s - ,
30 மார்,2025 - 11:30 Report Abuse

0
0
Reply
pmsamy - ,
30 மார்,2025 - 09:15 Report Abuse

0
0
Reply
முருகன் - ,
29 மார்,2025 - 23:08 Report Abuse

0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
29 மார்,2025 - 16:30 Report Abuse

0
0
Reply
Ray - ,இந்தியா
29 மார்,2025 - 15:15 Report Abuse

0
0
Reply
பிரேம்ஜி - ,
29 மார்,2025 - 15:07 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
29 மார்,2025 - 14:35 Report Abuse
0
0
vvek - ,
29 மார்,2025 - 21:02Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
29 மார்,2025 - 14:34 Report Abuse
0
0
Ray - ,இந்தியா
29 மார்,2025 - 20:52Report Abuse

0
0
Reply
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
29 மார்,2025 - 14:29 Report Abuse

0
0
Reply
RAAJ68 - ,
29 மார்,2025 - 14:20 Report Abuse

0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement