எக்ஸ் சமூக வலைதளத்தை தனக்குத்தானே விற்றார் எலான் மஸ்க்!

வாஷிங்டன்: பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சமூக வலைத்தளமான எக்ஸ் நிறுவனத்தை தனது சொந்தமான எக்ஸ் ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
பிரபல சமூக வலைதளமான டுவிட்டர், 2006ல் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் துவங்கப்பட்டது. அப்போது, நிறுவனத்தின் லோகோ எனப்படும் சின்னமாக பறவை இருந்தது. எலான் மஸ்க், 2022ல் டுவிட்டரை வாங்கினார். பின்னர் 'எக்ஸ்' என மறுபெயரிட்டார். லோகோவை மாற்றினார்.
இந்நிலையில், 2022ம் ஆண்டு 44 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட எக்ஸ் நிறுவனத்தை தற்போது 33 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் எக்ஸ் ஏ.ஐ.,நிறுவனத்திற்கு எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். இது இந்திய மதிப்பு படி ரூ.2.82 லட்சம் கோடி ஆகும்.
இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கை: எக்ஸ் நிறுவனம் எக்ஸ் ஏ.ஐ., நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் எக்ஸ் ஏ.ஐ., நிறுவனத்தை 80 பில்லியன் டாலர்களாகவும், எக்ஸ் தளத்தை 33 பில்லியன் டாலர்களாகவும் மதிப்பிடுகிறது. எக்ஸ் ஏ.ஐ., மற்றும் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏ.ஐ., ஆகியவற்றின் எதிர்காலம் ஒருங்கிணைந்துள்ளது. இந்த இணைப்பின் மூலம், எக்ஸ் ஏ.ஐ.,யின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன்களை எக்ஸ் தளத்தின் பயனர்கள் பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








மேலும்
-
ரூ.4.50 கோடி மதிப்பில்தடுப்பணை கட்ட பூஜை
-
சித்தேரியில் வங்கி கிளை துவங்கமலைவாழ் மக்கள் கோரிக்கை
-
அரசு பள்ளி ஆண்டு விழாவில்சிறுவர்கள் எழுதிய நுால் வெளியீடு
-
அனுமதியின்றி கனிம வளங்களை கொண்டு சென்ற 81 வாகனம் பறிமுதல்
-
தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் பலி, சிறுமி காயம்
-
டி.என்.டி., ஜாதி சான்றிதழ் வழங்காத தமிழக அரசுஓசூரில் 68 சமூக மக்கள் சார்பில் ஒட்டிய போஸ்டர்