தென் கொரியாவில் விடாது எரியும் காட்டுத்தீ: 18 பேர் பலி

சியோல்; தென் கொரியாவில் 5 நாட்களை கடந்து கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயினால் 18 பேர் பலியாகி உள்ளனர்.
தென் கொரியாவின் சான்சியாங்க் பிராந்தியத்தில் நிலவும் மோசமான வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ பற்றியது. 5 நாட்களை கடந்தும் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. உய்சங் பகுதியில் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தர் கோவில் தீயில் சிக்கி முழுமையாக சேதம் அடைந்தது.
பலத்த காற்று மற்றும் உஷ்ணமான நிலை காரணமாக, தீ கட்டுக்கடங்காமல் எரிகிறது. காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி இருக்கின்றனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சித்த வரும் அதே வேளையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அண்டாங் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த 10,000க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் களத்தில் இறங்கி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்
-
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பிரிவுகளில் வழக்கு
-
முகாமில் அகதிகளை பட்டினி போட்ட ஒப்பந்ததாரர்; சமரசம் செய்த அதிகாரிகள்
-
நான்கு சுவர்களுக்குள் கட்சி நடத்தும் விஜய்: அ.தி.மு.க., விமர்சனம்
-
தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசுகிறார்; விஜய் பேச்சு பற்றி இ.பி.எஸ்., கருத்து!
-
புதிய தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்: அன்புமணி கேள்வி
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி