சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல் : 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

சென்னை: சென்னையில் யுடியூபர் சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு குடியிருக்கும், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை, நேற்று முன்தினம்( மார்ச் 24) ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தினர். அப்போது வீட்டில், சங்கரின், 68 வயதான தாய் கமலா இருந்தார். இச்சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், அவர் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் இருப்பதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., சசிதரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









மேலும்
-
வி.கே.பாண்டியன் மனைவி ஐ.ஏ.எஸ்., பணிக்கு விருப்ப ஓய்வு
-
மியான்மருக்கு உதவ 'ஆபரேஷன் பிரம்மா' துவக்கியது இந்தியா
-
ரம்ஜானை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்; சிரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 75வது வர்தந்தி மகோத்ஸவம்; நாளை துவக்கம்
-
மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்
-
தமிழக மக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்