செங்கை அரசு பள்ளியில் 53 லேப் டாப் திருட்டு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவ -- மாணவியருக்கு அ.தி.மு.க., ஆட்சியில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் வழங்கப்பட்டு மீதம் இருந்த மடிக்கணினிகள் செங்கல்பட்டு அண்ணா மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று முன்தினம் மடிக்கணினி வைக்கப்பட்டு இருந்த அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டு அவ்வழியாக மடிக்கணினிகள் திருடப்பட்டு இருந்ததை கண்ட மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
பள்ளி நிர்வாகத்தினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் அந்த அறையில் சோதனை செய்தபோது 53 மடிக்கணினிகள் மாயமானது தெரிய வந்தது.
இது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் கல்வி துறையினர் அளித்த புகாரின்படி போலீசார் சென்று நடத்திய விசாரணையில் பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு பாழடைந்த கட்டடத்தின் வழியாக வந்த மர்ம நபர்கள் அறை ஜன்னலை உடைத்து மடிக்கணினிகளை திருடிச் சென்றது தெரிய வந்தது இச்சம்பவம் தொடர்பாக பிளஸ் 2 மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
அரசு பள்ளி ஆண்டு விழா
-
ஆற்பாக்கத்தில் சாலையோரம் பள்ளம் மண் அணைக்க வலியுறுத்தல்
-
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்
-
உசிலம்பட்டி ஏட்டுவை கொலை செய்த கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர் மூன்று பேர் கைது
-
ரூ.60.97 லட்சம் மோசடி: தந்தை, மகன் கைது
-
திருச்செந்துார் கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து