அரசு பள்ளி ஆண்டு விழா

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், சங்கராபுரம் கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் மேகலா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குழந்தைகளுக்கான அடிப்படை கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில், பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், நாடகம் ஆகியவை நடைபெற்றன. சுதந்திர போராட்ட வீரர்கள் உருவத்தில் மாணவ - மாணவியர் மாறு வேடமணிந்து வசனம் பேசி அசத்தினர்.

விழாவையொட்டி முன்னதாக பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளில் பங்கேற்ற மாணணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement