ஆற்பாக்கத்தில் சாலையோரம் பள்ளம் மண் அணைக்க வலியுறுத்தல்

ஆற்பாக்கம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள ஆற்பாக்கம் வழியாக, மாகரல், காவாந்தண்டலம், வெங்கச்சேரி, திருப்புலிவனம், உத்திரமேரூர், மாமண்டூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், ஆற்பாக்கம் ஏரிக்கரை அருகில், சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, ஆற்பாக்கம் ஏரிக்கரை அருகில் சாலையோர பள்ளத்திற்கு மண் அணைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement