ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 27) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் 65,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வார துவக்க நாளான (திங்கள் கிழமை) மார்ச் 24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 65,720 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய் கிழமை மார்ச் 25ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,480க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (மார்ச் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,560க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (மார்ச் 27) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் 65,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,235க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.



மேலும்
-
ஐதராபாத் அணி பேட்டிங்; டில்லி அணிக்காக அறிமுகமாகும் கே.எல். ராகுல்
-
எம்புரான் சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த மோகன்லால்: பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு
-
உல்லாச கப்பலில் அமேசான் நிறுவனருக்கு திருமணம்; யார் யாருக்கு அழைப்பு தெரியுமா?
-
மியான்மர் நாட்டில் பேரழிவு; நிலநடுக்கம் ஒரு பக்கம்; உள்நாட்டுப்போர் மறுபக்கம்!
-
தமிழகத்தில் ஏப்., 2, 3ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒடிசாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து: யாருக்கும் பாதிப்பு இல்லை