மியான்மர் நாட்டில் பேரழிவு; நிலநடுக்கம் ஒரு பக்கம்; உள்நாட்டுப்போர் மறுபக்கம்!

1

பாங்காக்: பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்கு பிறகும், மியான்மர் ராணுவ ஆட்சிக்குழு தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021ம் ஆண்டு பிப்ரவரியில், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, நேற்று முன்தினம், 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2,376 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மியான்மரில் ஆளும் ராணுவம் தெரிவித்து உள்ளது.



பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்கு பிறகும், மியான்மர் ராணுவ ஆட்சிக்குழு தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி உள்ளது. வடக்கு ஷான் மாநிலத்தின் நவுங்சோவில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


இது குறித்து ஐ.நா கூறியிருப்பதாவது: இந்தத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, மக்களை மீட்க முயற்சிக்கும்போது ராணுவம் தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதை ஏற்க முடியாது.


கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவ ஆட்சிக்குழு தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இவ்வாறு ஐ.நா., தெரிவித்துள்ளது.

Advertisement