வக்பு சட்டத்திருத்த மசோதாவை கைவிடணும்: தமிழக சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர்

60


சென்னை: ''வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஒற்றுமையுடன் வாழும் நாடு இந்தியா'' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

வக்பு சட்டத்திருத்த மசோதாவைக் கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.பின்னர் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வேற்றுமையில் ஒற்றுமை என்று நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு வாழும் நாடு இந்தியா.



பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற உண்மை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் உள்ளன. எனவே இதனை நாம் எதிர்க்க வேண்டும்.



பா.ஜ., கூட்டணி அரசின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்களையும் இலங்கை தமிழர்களையும் துன்புறுத்தியது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா சிறுபான்மை மக்களை கடுமையாக வஞ்சிக்கிறது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மாநில சுயாட்சியை பாதிக்கும்.


இஸ்லாமிய மக்களின் மத உரிமையை பாதிக்கும் வகையில் வக்பு சட்டத் திருத்தம் இருக்கிறது. வக்பு சட்டத்திருத்தத்தை பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் தி.மு.க., எம்.பி.,க்கள் கடுமையாக எதிர்த்தனர். சட்டத்திருத்தத்தின் மீது எதிர்கட்சிகள் சொன்ன திருத்தங்களை பார்லி கூட்டுக்குழு நிராகரித்துள்ளது. வக்பு வாரிய சட்டத்திருத்த முன் வடிவினை மத்திய அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement