விஷம் குடித்து ஜூவல்லரி கடை உரிமையாளர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை: ஆந்திராவில் சோகம்

மதகசிரா: ஜூவல்லரி கடை உரிமையாளர் குடும்பத்தினர் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் இன்று ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா சாரி, இவர் மதகசிராவில் உள்ள காந்தி பஜாரில் ஜூவல்லரி கடை உரிமையாளர்.
கிருஷ்ணா சாரி, அவரது மனைவி, சரளா மற்றும் 2 மகன்களுடன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த குடும்பத்தினர் தற்கொலைக்கு நிதி நெருக்கடி மற்றும் குடும்பப் பிரச்னைகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
வீட்டிலிருந்து ஒரு சயனைடு பாட்டிலை மீட்டோம். இதுதான் இவர்கள் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என்று நம்புகிறோம். நேற்று இரவு இந்த விஷத்தை குடித்திருக்க வேண்டும். இந்நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம். சாரியின் உடைந்த மொபைல் போனிலிருந்து ஆய்வு செய்து வருகிறோம்.
நிதி நெருக்கடி மட்டுமே காரணமா என்பதை சரிபார்க்கவும், துயரத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பதைக் கண்டறியவும் விரிவான விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.
மேலும்
-
கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது
-
தி. மு. க., போதைப்பொருளை ஒழிக்க 'ஓ' போட்டது போதும்: இபிஎஸ் பாய்ச்சல்
-
பார்லிமென்டிற்கு வர வேண்டும்; எம்.பி.,க்களுக்கு பா.ஜ., உத்தரவு
-
உ.பி., அரசின் புல்டோசர் நடவடிக்கை சட்டவிரோதமானது: சுப்ரீம் கோர்ட்
-
சொத்துத் தகராறில் தந்தையை கொன்ற மகன்: நெல்லையில் பயங்கரம்
-
உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்; பிரதமர் மோடி