சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் சரண்டர்: ஆயுதங்களும் ஒப்படைப்பு

3

பீஜாப்பூர்; சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்துள்ளனர்.



சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாநில சிறப்புப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் செயலாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், பீஜாப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 50 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர். ஆயுதங்களையும் அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.


இதுபற்றி மூத்த காவல்துறை உயரதிகாரி கூறுகையில், இன்று மட்டும் 50 நக்சலைட்டுகள் முன்வந்து சரண்டராகி இருக்கின்றனர். அவர்களில் 14 பேரின் தலைக்கு ரூ.68 லட்சம் வரை வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது.


மாநில போலீஸ் மற்றும் மத்தி ரிசர்வ் படையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர் என்றார்.


பிரதமர் மோடியின் சத்தீஸ்கர் வருகைக்குக் சிலமணி நேரங்கள் முன்பாக நக்சலைட்டுகள் சரண்டர் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement