இனி ஒரு போதும் பிரியமாட்டேன்: அமித் ஷாவிடம் நிதிஷ் உறுதி

பாட்னா: "பா.ஜ.,வை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன்," என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் உறுதி அளித்தார்.
பீஹார் மாநிலத்திற்கு விரைவில் சட்ட மன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இங்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார்.
இந்நிலையில் பாட்னாவில் இன்று நடந்த அரசு விழாவில், மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் நிதிஷ்குமார் இருவரும் பல திட்டங்களை அறிமுகம் செய்துவைத்தனர்.
இந்த விழாவில் நிதிஷ்குமார் பேசியதாவது:
பா.ஜ.,வை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன். இரண்டு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்காது. இங்கு கூடிய உள்ள கூட்டம் அரங்கம் முழுவதும் நிரம்பி உள்ளது.
முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் (ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி) என்ன செய்தார்கள்? அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றனர், ஆனால் சமூகங்களுக்கு இடையிலான மோதல்களை ஒருபோதும் நிறுத்த முடியவில்லை,
பீகாரில் பெயருக்குத் தகுந்த சுகாதாரப் பராமரிப்பு இல்லை. நல்ல கல்வி வசதிகள் இல்லை.
ஜேடியு-பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின. 90களின் நடுப்பகுதியில் இருந்து பா.ஜ கூட்டணியில் இருந்தோம். 2014ல் பிரிந்தோம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022ம் ஆண்டில், அவர் மீண்டும் பிரிந்தோம், இருப்பினும், கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, மீண்டும் ஒரு முறை தலைகீழாக மாறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம்.
பா.ஜ..,வுடனான முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம்.அதனால் நான் இரண்டு முறை தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது.
இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.








மேலும்
-
சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு
-
ஆத்திரமூட்டும் முகமது யூனுஸ் அறிக்கை: தலைவர்கள் கண்டனம்
-
டில்லியில் நான்கு மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து: கார்கள் எரிந்து நாசம்
-
கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது
-
தி. மு. க., போதைப்பொருளை ஒழிக்க 'ஓ' போட்டது போதும்: இபிஎஸ் பாய்ச்சல்
-
பார்லிமென்டிற்கு வர வேண்டும்; எம்.பி.,க்களுக்கு பா.ஜ.,, காங்., உத்தரவு