பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை; இ.பி.எஸ்.,

12


தூத்துக்குடி: ''பிரிந்தது பிரிந்தது தான். கோவிலாக கருதப்படும் அ.தி.மு.க., அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்கியவர் ஓ.பி.எஸ்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வரும் நிதி தாமதம் ஆகிறது. இதனை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடர வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு.



தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலம் இருக்கிறது. இப்போதே எந்த செய்தியைச் சொன்னாலும் அது நிலைக்காது.தேர்தல் நெருங்கும் போது கூட்டணிப் பேச்சு நடைபெறும்; அப்போது அனைவருக்கும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தி.மு.க.,வை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல; ஒத்த கருத்துடைய கட்சிகளை நாங்கள் சேர்த்துக்கொள்வோம்.


ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையலாம். தி.மு.க.,வை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை. உருட்டல், மிரட்டல்கள் எல்லாம் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் ஆளும் கட்சி அல்ல. காவல் துறை ஏவல் துறையாக மாறி போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர்: பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., சக்திகள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என பன்னீர் செல்வம் கூறியுள்ளார்?

இ.பி.எஸ்.,:
அவர் எப்ப வேணாலும் பேசி கொண்டே தான் இருக்கிறார்.அது எல்லாம் இனிமேல் சாத்தியம் கிடையாது. பிரிந்தது பிரிந்தது தான். கோவிலாக கருதப்படும் அ.தி.மு.க., அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்கியவர் ஓ.பி.எஸ்.; அவரை கட்சியில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கட்சியில் இருப்பதற்கே ஒ.பி.எஸ்., தகுதியற்றவர்.

Advertisement