இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதல்: அட்டவணை வெளியீடு

மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள், 'டி-20' தொடருக்கான அட்டவணை வெளியானது.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, மூன்று ஒருநாள், ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்க உள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன. ஐந்து 'டி-20' போட்டிகள் கான்பெரா (அக். 29), மெல்போர்ன் (அக். 31), ஹோபர்ட் (நவ. 2), கோல்டு கோஸ்ட் (நவ. 6), பிரிஸ்பேனில் (நவ. 8) நடக்க உள்ளன.

ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாகவும், 'டி-20' போட்டி இரவு ஆட்டமாகவும் நடத்தப்படும். இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக கடந்த ஆண்டு 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடியது.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா செல்லும் இந்திய பெண்கள் அணி, மூன்று 'டி-20' (பிப். 15, 19, 21), மூன்று ஒருநாள் (பிப். 24, 27, மார்ச் 1), ஒரே ஒரு டெஸ்டில் (மார்ச் 6-9) விளையாடுகிறது.

Advertisement