ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்

ஆமதாபாத்: தாமதமாக பந்துவீசியதால் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆமதாபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை அணி 36 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் சென்னையிடம் வீழ்ந்த மும்பை அணி, இன்று மும்பையில் நடக்கும் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டாவை எதிர்கொள்கிறது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறினர். இதனையடுத்து மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த சீசனில் மும்பை அணி 3 போட்டியில் தாமதமாக பந்துவீசியதால், இம்முறை சென்னைக்கு எதிரான போட்டியில் பங்கேற்க பாண்ட்யாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

Advertisement