சந்தேகத்திற்கிடமான ஆயுத உரிமம்: குஜராத்தில் 21 பேர் கைது; 25 ஆயுதங்கள் பறிமுதல்

2

சுரேந்திரா நகர்: குஜராத்தில் சந்தேகத்திற்கிடமாக ஆயுத உரிமம் பெற்றுள்ள 21 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 25 ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து டி.எஸ்.பி. நிகுஞ்ச் பட்டேல் கூறியதாவது;

சுரேந்திரநகர் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான வழிகளில் நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் இருந்து ஆயுத உரிமங்களைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தி துப்பாக்கிகளை வாங்கியதாக 25 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 21 பேரில், 17 பேர் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 25 ஆயுதங்களை வாங்கியுள்ளனர், மற்றவர்கள் தங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட உரிமங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்டவற்றில் .12 போரேஜ் துப்பாக்கிகள், ரிவால்வர்கள் மற்றும் கத்திகள் உள்ளிட்டவை அடங்கும்.கைதானவர்கள் போலி மருத்துவ சான்றுகள், வங்கி கணக்கில் போலி பண வரவு போன்றவற்றைக் கொண்டு ஆயுத உரிமம் பெற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த துப்பாக்கி உரிமையாளர்களில் 14 பேருக்கு கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கனிம திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

மற்ற மூவருக்கும் ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு நிகுஞ்ச் பட்டேல் கூறினார்.

Advertisement