அபாயகரமான மரங்களின் கிளைகளை அகற்ற திட்டம்
பெங்களூரு: பெங்களூரில் மரக்கிளை விழுந்து, 3 வயது சிறுமி பலியான சம்பவத்துக்கு பின், விழித்து கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், அபாயமான மரங்கள், மரக்கிளைகளை அகற்ற திட்டமிட்டுள்ளனர்.
பெங்களூரின் பல்வேறு இடங்களில் அபாயகரமான மரங்கள், மரக்கிளைகள் உள்ளன. பிரதான சாலைகளில் இத்தகைய மரங்கள் காணப்படுகின்றன. கோடைக்காலம் என்பதால் உலர்ந்த மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. சிறு மழைக்கும் தாக்கு பிடிப்பதில்லை.
மார்ச் 22ம் தேதி, பெங்களூரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அன்றைய தினம் இரவு ஜீவனஹள்ளியின், பூர்வா பார்க் அபார்ட்மென்ட் அருகில், 3 வயது சிறுமி தன் தந்தையுடன் பைக்கில் செல்லும் போது, மரக்கிளை முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இச்சம்பவத்துக்கு பின், சுதாரித்துக் கொண்ட மாநகராட்சி வனப்பிரிவு அதிகாரிகள், அபாய நிலையில் உள்ள மரங்கள், மரக்கிளைகளை அகற்ற முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, பெங்., மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அபாய நிலையில் உள்ள மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்தகைய மரங்கள், கிளைகள் தென்பட்டால் பொது மக்கள், மாநகராட்சி சஹாய வாணி எண் 1533ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்' என்றனர்.
மேலும்
-
அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்கட்டணம் அரசே செலுத்த முடிவு; மே முதல் அமலுக்கு வருது
-
மண்டல பூஜை நிறைவு விழா
-
பராமரிப்பு பணிக்காக ரயில் சேவை ரத்து
-
கூடுதல் பெட்டிகளுடன் ரயில்களை இயக்க பயணிகள் வலியுறுத்தல்
-
மகிழ்ச்சியை நோக்கி மாரத்தான் ஓட்டம்
-
பல்கலை நுாலகத்தை பயன்படுத்தி அரசு பணி பெற்ற 85 இளைஞர்கள்