பராமரிப்பு பணிக்காக ரயில் சேவை ரத்து

மதுரை : மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட தென்காசி - செங்கோட்டை இடையே பராமரிப்புப்பணிகள் காரணமாக ஏப்., 1 முதல் 30 வரை (ஞாயிறு தவிர்த்து) ரயில் சேவையில் கீழ்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை - செங்கோட்டை - மதுரை (56719/56720), செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை (56738/56735) ஆகிய பாசஞ்சர் ரயில்கள் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். தென்காசி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

Advertisement