தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு
சிறுபாக்கம்; தி.மு.க., சார்பில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக வேண்டுமென மாவட்ட செயலாளர் கணேசன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 4,034 கோடி ரூபாய் வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. இதனை கண்டித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின்படி, கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நாளை 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அதன்படி, மங்களூர், ராமநத்தம், அடரி, இறையூர், நல்லுார், கோமங்கலம், கருவேப்பிலங்குறிச்சி, பாலக்கொல்லை, மணக்கொல்லை, காடாம்புலியூர், வடக்குத்து, அங்குசெட்டிபாளையம், அண்ணாகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறபட்டுள்ளது.