வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

புவனகிரி : கீரப்பாளையத்தில் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
திட்டக்குடி, பொடையூர் ஜெ.எஸ்.ஏ., வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் கீரப்பாளையம் வயலுார் கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் நேரடி பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கீரப்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மாணவி பிரவீனா வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ஜெயசேகரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் தலைமை ஆசிரியர் ரமேஷ் பேரணியை துவக்கி வைத்தார். மாணவிகள் பிரியதர்ஷினி, சஞ்சனா, சண்முகப்பிரியா, பிரியதர்ஷினி உள்ளிட்ட குழுவினர் பேரணியை ஒருங்கிணைத்து ரசாயன உரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர். மாணவி பவித்ரா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தற்கொலைக்கு முயன்ற பெண்களை காப்பாற்றிய போலீசுக்கு வெகுமதி
-
போதை மாணவர் ஓட்டிய ஸ்கூட்டர் மோதியதில் போலீஸ்காரர் படுகாயம்
-
சுங்க கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
-
விஜயநகருக்கு இடம்பெயரும் ஆக்கிரமிப்பு கடைகள் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் தவிப்பு
-
போதை மாமனாரை தாக்கிய மருமகன்கள்
-
செம்பரம்பாக்கம் ஏரி மதகில் நீர் கசிவு
Advertisement
Advertisement