வேளாண் படிப்புகளுக்கு வாய்ப்புகள் தாராளம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர் சுதாகர் பேசியதாவது:
வேளாண் பல்கலையின் கீழ் பி.எஸ்சி., வேளாண், தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து, அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், செரிக்கல்ச்சர், பி.டெக்., பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ், வேளாண் இன்ஜினியரிங், வேளாண் இன்பர்மேசன் டெக்னாலஜி, எனர்ஜி அண்டு என்விராயன்மென்ட், உணவு தொழில்நுட்பம் ஆகிய 14 படிப்புகள் வழங்கப்படுகிறது. உடனடி அரசாங்க வேலை, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோர் என்ற மூன்று வாய்ப்புகளையும் வழங்குகிறது. விரைவில், சேர்க்கை விண்ணப்பங்கள் வெளியிடப்படும்.
பிளஸ்2 தேர்வு முடிவுகள் வந்தவுடன் கவுன்சிலிங் அறிவிப்பு வெளியாகும். முழுமையாக ஆன்லைன் வாயிலாக அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும். வேளாண் படிப்புகள், மீன் வள பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையின் வேளாண் படிப்புகளுக்கு ஒருங்கிணைத்து கவுன்சில் நடைபெறும். இவை அனைத்திற்கும் ஒரு விண்ணப்பம் போதுமானது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.