பக்தர்கள் பாதம் காக்க தேங்காய் நார் கம்பளம்

பல்லடம்; பல்லடம் அடுத்த மாதப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசுவாமி கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, அஷ்டமி, பிரதோஷம் உள்ளிட்ட மாதாந்திர விஷேச நாட்களிலும் அதிகப்படியான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிலை சுற்றி வரும் பக்தர்கள், கடும் வெப்பம் காரணமாக, காலை கீழே வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் சிரமப்படுகின்றனர். கோவிலை சுற்றி வர பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், தேங்காய் நார் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செஞ்சுரி காகிதம்
-
குறையும் பருத்தி மகசூல்
-
இந்தியா - சீனா உறவின் 75வது ஆண்டு விழா இருதரப்பு உறவை பலப்படுத்த தலைவர்கள் உறுதி
-
சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
Advertisement
Advertisement