கார் கவிழ்ந்தது; இருவர் தப்பினர்

திருப்பூர், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண் பிரவீன் 21,கவின் 19. கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கின்றனர். நேற்று மாலை காரில் அவிநாசி வழியாக பெருமாநல்லுார் நோக்கி சேலம் - கொச்சி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அவிநாசி அடுத்த பழங்கரை மகாராஜா கல்லுாரி அருகே இவர்களது காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் திடீரென அதிவேகமாக வந்து முந்திச் செல்ல முயன்றது. அருண் பிரவீன் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மையத்தடுப்பில் மீது மோதி ஏறி கவிழ்ந்து உருண்டது. இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.

Advertisement