'பெரிய பிரச்னைக்கான சிறிய தீர்வை கண்டறிந்தால் வெற்றி நிச்சயம்'

கலை, அறிவியல் எனும் தலைப்பில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சித்ரா பேசியதாவது:
மொத்த மாணவர்களில், 32 சதவீதத்துக்கும் அதிகமானோர் கலை, அறிவியல் கல்வியை பயின்றுள்ளனர். தற்போதைய காலத்துக்கு ஏற்ற பாடத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால், ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு எதிர்காலம் உள்ளது. வணிகவியல் துறையில் வேலைவாய்ப்புகள் ஏராளம். தடய அறிவியல், டி.என்.ஏ., பகுப்பாய்வு உள்ளிட்டவற்றில் நல்ல எதிர்காலம் உள்ளது.
குறிப்பாக விஷவல் கம்யூனிகேஷன், மாஸ் மீடியா உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. கூடுதல் திறன்களை வளர்ப்பதன் வாயிலாக நாம் தனித்துவமாக இருக்க முடியும். பெரிய பிரச்னைகளுக்கும் சிறிய அளவிலான தீர்வு இருக்கும். அதை கண்டறிந்தால் போதும்.இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும்
-
ஓட்டல்களில் பிளாஸ்டிக் தாளில் உணவு பார்சல்கள் அலட்சியம்; உணவு பாதுகாப்புத்துறை ரெய்டு அவசியம்
-
பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு: நாளை முதல் அமல்
-
ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்
-
'நான் பழைய மூர்த்தி இல்லை' செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
-
நலத்திட்ட உதவி வழங்கல்