'நான் பழைய மூர்த்தி இல்லை' செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
வாடிப்பட்டி : 'என் அண்ணன் செல்லுார் ராஜு உரிமையோடு என்னை திட்டினால் திட்டட்டும். நான் பழைய மூர்த்தி அல்ல. செயல்பாட்டை தேர்தலில் பார்த்துக் கொள்வோம்' என அமைச்சர் மூர்த்தி சவால் விடுத்தார்.
மதுரை மேற்கு தொகுதி பரவை பேரூராட்சியில் 3 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி நலத்திட்டம் வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: மதுரை மேற்கு தொகுதியில் துரோகிகளால் தோல்வி அடைந்தோம். இனி துரோகம் செய்ய முடியாது. இப்பகுதிக்கு கட்சி பணியாற்ற பொறுப்பேற்று 2 மாதமாகிறது.
மரியாதைக்குரிய அண்ணன் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, 'நான் பங்கேற்ற பூமிபூஜை, நலத்திட்ட உதவிகள் குறித்து, இங்கு என்ன செய்தாலும் எதுவும் ஆகாது' என விமர்சித்துள்ளார். அவர் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளட்டும்.
ஒரு மாதம் முன் இங்கு அவர் வேட்டி, சேலை, சாப்பாடு வழங்கினார். பத்தாண்டு ஆண்டு அமைச்சராக இருந்துள்ளீர்கள். மக்கள் பணியை நீங்களும் செய்யுங்கள், நாங்களும் செய்கிறோம். என்னை பழைய மூர்த்தியாக நினைக்க வேண்டாம். பழைய மூர்த்தி பதில் சொல்வான். தற்போது என்னிடம் செயல்பாடுதான் உள்ளது. முதல்வர், துணை முதல்வர் வழங்கிய பணியை நுால் மாறாமல் செய்து முடிப்பேன் என்றார்.
மேலும்
-
சவுக்கு சங்கர் வீடு சூறை: 5 பேரை மட்டும் கைது செய்து அமைதி காக்கும் சி.பி.சி.ஐ.டி.,
-
ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி துவக்கம்
-
மாமியாருக்கு அஞ்சலி போஸ்டர் 'சில்மிஷ' மருமகனுக்கு 'காப்பு'
-
டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டுரூ.2 லட்சம் மதிப்பு மதுபானம் திருட்டு
-
வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து1,500 கன அடியாக சரிவு