பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது!

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று (மார்ச் 28) பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பள்ளியில் தேர்வு எழுத சென்ற மாணவிகள் ஆசிரியரிடம் ஆசி பெற்றனர்.


தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் ஏப்., 15 வரை நடக்கிறது. மாவட்டம் முழுதும், 108 மையங்களில் தேர்வு துவங்குகிறது. தமிழ் தேர்வு இன்று நடக்கிறது. ஏப்., 2ல் ஆங்கிலம், 4ல், விருப்ப மொழிப்பாடம், 7ல் கணிதம், 11ல் அறிவியல், 15ல் சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.

12,487 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 46 ஆயிரத்து 471 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 499 மாணவிகளும், 25 ஆயிரத்து 841 தனித்தேர்வர்கள் மற்றும் 273 சிறைவாசித் தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வு எழுத வந்த மாணவியருக்கு, தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News

Advertisement