மூன்றாவது முறை அதிபர் பதவி: நகைச்சுவை அல்ல என்கிறார் டிரம்ப்

7


வாஷிங்டன்: 3வது முறையாக அதிபராக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தி உள்ளார். அவர், நான் கூறுவது நகைச்சுவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்தப்படி விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி வாகை சூடினார். இதனால் 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிபர் ஆக இருந்த டிரம்ப் தோல்வியை தழுவினார்.


தற்போது கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று, 2வது முறையாக அதிபர் ஆனார். 3வது முறை அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியிடுவார். ஆனால் அமெரிக்கா தேர்தல் விதிப்படி படி போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து செய்தி சேனலுக்கு டிரம்ப் அளித்த பேட்டி:



3வது முறையாக அதிபராக வர வேண்டும். நான் கூறுவது நகைச்சுவை அல்ல. இரண்டு முறை மட்டுமே அதிபராக வர முடியும் என்ற வரம்பைத் தவிர்ப்பதற்கு முறைகள் இருக்கிறது. இது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுப்பேன். நிறைய அமெரிக்கர்கள் தான் மூன்றாவது முறையாகவும் பதவியேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது கவனம் முழுவதையும், 2வது அதிபர் பதவி காலம் மீது வைத்துள்ளேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement