அன்றே சொன்னேன்... இன்று இ.பி.எஸ்., ரூட்டு மாறிட்டார்: துணை முதல்வர் உதயநிதி

28

சென்னை: 'இன்று டில்லியில் வழி மாறி, 3 கார்களில் மாறி பா.ஜ., அலுவலகத்திற்கு சென்ற அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு என்னுடைய வாழ்த்துக்கள்,' என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.


மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: சட்டசபையில் நான் பதிலுரை ஆற்றும் போது எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., ஒருமுறை கூட அவையில் இருப்பதில்லை. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இ.பி.எஸ்., என்னுடைய காரில் ஏறி அவர் செல்ல முயன்றார். அப்போது, என்னுடைய காரை எடுத்துச் செல்லுங்கள் என்றும் பிரச்னை இல்லை என்றேன். அப்போது, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., எங்கள் கார் எப்போதும் வழி மாறி போகாது என்றார். ஆனால், இன்று டில்லியில் வழி மாறி, 3 கார்களில் மாறி அவங்க கட்சி அலுவலகத்திற்கு சென்றதாக கூறினார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

பொதுவாக ஒரு பேப்பரில் எழுதும் சில 'உ' போட்டு எழுதத் தொடங்குவார்கள். ஆனால், நம்முடைய முதல்வர் 'ரூ' போட்டு இந்தப் பட்ஜெட்டை தொடங்கியுள்ளார். இப்படிப்பட்ட தலைவர் இருக்கும் வரை தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு மட்டுமல்ல எந்தத் திணிப்பையும் செய்ய முடியாது, இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

5 மண்டலங்களில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் உணவுத்திருவிழா நடத்தப்படும்.

120 வட்டாரங்களில் ரூ.1,000 கோடியில் வாழ்ந்து காட்டுவோம் 3.0 திட்டம் செயல்படுத்தப்படும்

ரூ.66 கோடியில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

நிலம் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும்; 22 சட்டப்பேரவை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்

6 மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் இன்னும் 3 மாதங்களில் நிறைவு பெறும்

விளையாட்டு வீரர்கள் திறமைக்கேற்ப உதவிதத் தொகை வழங்கப்படும்

சென்னை, மதுரையில் 24 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டி நடைபெறும்.

மகளிர் உரிமைத் தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 19 மாதங்களில் ரூ.21,000 கோடி உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement