திட்டமிட்டு அவையில் இருந்து வெளியேற்றினார்: சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

13


சென்னை: எங்களை திட்டமிட்டு அவையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டி உள்ளார்.



சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் அப்பாவு உத்தரவுப்படி வெளியேற்றப்பட்டனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: உசிலம்பட்டி போலீஸ் கொலை தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.


மக்கள் பிரச்னை குறித்து அவையில் பேச அனுமதி வழங்கப்படவில்லை. போலீசாரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் தைரியம் பெற்றுள்ளனர். போதைப்பொருளை கட்டுப்படுத்த தி.மு.க., அரசு தவறிவிட்டது. மக்கள் பிரச்னையை பேசவே எதிர்க்கட்சி, எங்களை வெளியேற்றுவதிலேயே சபாநாயகர் குறியாக இருக்கிறார்.



மக்கள் பிரச்னையை கவனத்துக்கு கொண்டு வருவது தான் எங்கள் நிலைப்பாடு. சர்வாதிகார போக்கை சட்டசபையில் அரங்கேற்றி உள்ளார். ஆபரேஷன் கஞ்சா திட்டம் என்ன ஆனது? போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் கொடுப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Advertisement