இதே நாளில் அன்று

மார்ச் 29, 1965
கடலுார் மாவட்டம், ஆடூர் அகரம் எனும் ஊரில், சின்னையா - செங்கேணி அம்மாள் தம்பதியின் மகனாக, 1924, செப்டம்பர் 21ல் பிறந்தவர் விஜயரங்கம் எனும் தமிழ் ஒளி.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் பள்ளிப்படிப்பு, வேலுார் மாவட்டம், கலவையில் உயர்கல்வி முடித்தார். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். தான் எழுதும் கவிதைகளை, பாரதிதாசனிடம் படித்துக் காட்டி பாராட்டு பெற்றார்; அவர் சிபாரிசில், தஞ்சை கரந்தை தமிழ் கல்லுாரியில் படித்தார்.
'திராவிட நாடு, குடி அரசு, புதுவாழ்வு' உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். 'வீராயி, விதியோ வீணையோ, தமிழர் சமுதாயம்' உள்ளிட்ட நுால்களை எழுதினார்.
'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் எழுதிய, 'சிற்பியின் காதல்' எனும் நாடகம், 'வணங்காமுடி' எனும் திரைப்படமாக வெளியானது. பூவண்ணன், விந்தன், ஜெயகாந்தன் உள்ளிட்டோர், இவரின் படைப்புகளை பாராட்டினர். தொழிலாளர்களின் ஏமாற்றங்களையும், சிரமங்களையும் தன் படைப்புகளில் வெளிப்படுத்திய இவர், தன் 40வது வயதில், 1965ல், இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
மேலும்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை