நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை

பாரிஸ்: நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரான்ஸ் வலதுசாரி கட்சித் தலைவர் மரியன் லீ பென், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் எதிர்க்கட்சியாக இருப்பது, நேஷனல் ராலி (RN) கட்சியாகும். வலதுசாரிக் கொள்கைகளை பின்பற்றும் இந்த கட்சி, தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நேர் எதிரான கொள்கைகளை பின்பற்றக் கூடியது.
இந்தக் கட்சியின் தலைவராக இருப்பவர் மரியன் லீ பென். இவரது தந்தையால் தொடங்கப்பட்ட இந்த கட்சியை பெண்மணியான மரியன் வழிநடத்தி வருகிறார்.தற்போது இந்த கட்சி பிரான்ஸ் நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், மரியன், ஐரோப்பிய நிதியை முறைகேடாக கட்சிக்கு பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
அது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, மரியன் லீ பென் குற்றவாளி என அறிவித்தார்.
அவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
அவருக்கு மூன்று லட்சம் யூரோ மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுமட்டுமின்றி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல், நேரடியாக இந்த தடை அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் வரும் 2027ம் ஆண்டு பிரான்ஸ் தேர்தலில் மரியன் போட்டியிட வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.




மேலும்
-
தலைவர் பதவி வேண்டுமா, வேண்டாமா... உங்கள் சாய்ஸ்: அண்ணாமலையை முடிவெடுக்க சொல்கிறார் அமித் ஷா
-
மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தால் 'சீட்' மறுக்க தி.மு.க., தலைமை முடிவு
-
கூடலுார் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது; சுருங்கிய தெருக்களால் வாகன ஓட்டிகள் அவதி
-
கம்பம் மருத்துவமனையில் சித்தா டாக்டர் இன்றி சிரமம்
-
பெண் தற்கொலை
-
ரெகுலர் தாசில்தாராக வாய்ப்பே கிடைக்காதா 10 ஆண்டுகளாக பணி செய்தவர்கள் புலம்பல்