இந்தியா எதிர்ப்பு மனநிலை!

காங்., - எம்.பி., ராகுலை போலவே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்தியா எதிர்ப்பு மனநிலையுடன் வெளிநாடு சென்றுள்ளார். மேற்கு வங்கத்துக்குள் வங்கதேசத்தவர்களை எப்படி அனுமதிப்பது; ஆதார் அட்டை எப்படி கொடுப்பது என்பதே மம்தாவின் அரசியலாக உள்ளது.

சஞ்சய் ஜெய்ஸ்வால்

லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

புதிய பார்முலா!



நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் ஆகியோர் புதிய பார்முலாவை கொண்டு வந்துள்ளனர். இது, தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, சமூக ஊடகங்களை கண்காணிப்பது குறித்து நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சிவகுமார்

கர்நாடக துணை முதல்வர்,

காங்கிரஸ்

அரசியல் ஆதாயம்!



உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில், சமாஜ்வாதி எம்.பி., ராம்ஜிலால் சுமனின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தை, அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார். சமாஜ்வாதி ஆட்சியில் இருந்த போது, இது போல பல சம்பவங்கள் நடந்தன. அவற்றை யாரும் மறக்க மாட்டார்கள்.

மாயாவதி

தலைவர்,

பகுஜன் சமாஜ்



Advertisement