கொண்டைக்கடலை இறக்குமதிக்கு 10 சதவீத வரி

புதுடில்லி:கருப்பு கொண்டைக் கடலை இறக்குமதிக்கு, ஏப்ரல் 1ம் தேதி முதல் 10 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்தாண்டு மே மாதம், விலையேற்றத்தை கட்டுப்படுத்த, கொண்டைக்கடலையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு அனுமதித்திருந்தது. இது நாளை மறுதினத்துடன் முடிவடைய உள்ள நிலையில், ஏப்., 1ம் தேதி முதல், 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement