ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!

புதுடில்லி: ஜிப்லி டிரெண்ட் சமூக வலைதளத்தில் அனல் பறக்கிறது. ஜிப்லி டிரெண்டுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மாறினார். ஜிப்லிபை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என சி. இ. ஓ., சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்தார்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ, உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஏஐ சாப்ட்வேரில் ஒன்று. பைல் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல், கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். சாட் ஜி. பி.டி.,யை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.



தரும்.
ஏராளமான இணையவாசிகள் தங்கள் புகைப்படங்களை ஜிப்லிபை செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இது உலகளாவிய ட்ரெண்டிங் ஆனது. தங்களது போட்டோக்களை ஜிப்லி செய்து அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர்.
பல லட்சம் லைக்குகளை அள்ளி அங்கும் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. அந்த வகையில் அ.தி.மு.க., பொது செயலர் இ. பி. எஸ். ஜிப்லி டிரெண்டுக்கு மாறினார். அவரது சுவாரஸ்ய அரசியல் நிகழ்வுகளை ஜிப்லி செய்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஒரு கட்டத்தில் சாட்ஜிபிடியின் மெயின் சர்வரே ஆட்டம் கண்டது. பலர் ஒரே நேரத்தில் இந்த பில்டரை பயன்படுத்தத் தொடங்கியதால் சாட்ஜிபிடியின் செயல் வேகம் குறைந்து போட்டோக்கள் சரியாக ஜெனரேட் ஆகாமல் நின்றது.
இது குறித்து, சாட்ஜிபிடியின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் வேதனை பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது: ஏராளமானோர் ஜிப்லிபை செய்து வருவதால் சாட்ஜிபிடி சர்வர்கள் ஓவர்லோட் ஆகி விட்டது. எங்கள் நிறுவன ஊழியர்களும் தூக்கமின்றி தவிக்கின்றனர். ஜிப்லிபை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
ரிப்ளை
தொடர்ந்து ஜிப்லி செய்ய கேட்டவர்களுக்கு வருத்தம் தெரிவித்து சாட்ஜிபிடி சார்பில் ரிப்ளை மெசேஜ் கொடுத்தனர். அதையும் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் டிரெண்ட் ஆக்க தொடங்கி உள்ளனர்.
வாசகர் கருத்து (4)
Karthik - ,இந்தியா
31 மார்,2025 - 20:06 Report Abuse

0
0
Reply
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
31 மார்,2025 - 16:40 Report Abuse

0
0
Reply
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
31 மார்,2025 - 16:38 Report Abuse

0
0
முருகன் - ,
31 மார்,2025 - 17:40Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement