உ.பி.,யில் தொழிற்சாலைகள் 2 ஆண்டுகளில் 40 சதவிகிதம் உயர்வு

லக்னோ:உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்திருப்பதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து, உ.பி., வேலைவாய்ப்பு துறை செயலர் சண்முகசுந்தரம் கூறியதாவது:

கடந்த 2017ம் ஆண்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, உத்தர பிரதேசத்தில் 14,000 பதிவு பெற்ற தொழிற்சாலைகள் அதிகரித்திருக்கின்றன. மாநிலத்தில் தற்போது பதிவு செய்யப்பட்ட 26,915 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.

கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், உத்தர பிரதேசத்தில் 19,100 தொழிற்சாலைகள் இருந்த நிலையில், அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்து, 27,000 தொழிற்சாலைகள் என்ற அளவை நெருங்கியிருக்கிறது.

தொழில் துவங்க பல்வேறு சலுகைகளை அளிக்கும் மாநில அரசு, வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement