பங்கு சந்தை நிலவரம்

உலகளாவிய போக்கால் இறக்கம்
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன. அமெரிக்க அதிபர் டிரம்பின் 25 சதவீத கூடுதல் வரி விதிப்பால், வர்த்தக போர் குறித்த அபாயம் எழுந்துள்ளதால், உலகளாவிய சந்தைகள் சரிவை கண்டன.
இதன் எதிரொலியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள்
இறக்கத்துடன் துவங்கின. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டம், நிறுவனங்களின்
நான்காவது காலாண்டு முடிவுகள் ஆகியவற்றுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள்,
பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
இதனால், நேற்றைய வர்த்தகத்தின் போது சந்தையில் தள்ளாட்டம் நீடித்தது. பிற்பகல் வர்த்தக நேரத்தின் போது மளமளவென சரிந்த சந்தை குறியீடுகள், முடிவில் சற்று முன்னேற்றம்
கண்டன. வாராந்திர அடிப்படையில் நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவடைந்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 4,353 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.18 சதவீதம் அதிகரித்து,
74.16 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 பைசா அதிகரித்து, 85.50 ரூபாயாக இருந்தது.
மேலும்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை