'எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு ஊக்கம் தரும் மத்திய அரசு'

சென்னை:'மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் சாதன பாகங்களுக்கான ஊக்குவிப்பு சலுகை அறிவிப்பு, எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு தேவையான ஊக்கத்தை அளிக்கிறது' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு எலக்ட்ரானிக் சாதனங்களின் பாகங்களுக்கு பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அமைச்சர் ராஜா அறிக்கை:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதன பாகங்களுக்கு பி.எல்.ஐ., திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, எலக்ட்ரானிக்ஸ் சூழலை மேம்படுத்துவதற்கான தமிழகத்தின் தொடர்ச்சியான உத்திக்கு ஒரு வலுவான அங்கீகாரமாகும்.
மத்திய அரசின் இந்த முயற்சி எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஏற்கனவே அதற்கான அடித்தளத்தை அமைத்துவிட்டோம். அது, ஏற்கனவே பலன்களைக் காட்டி வருகிறது.
எலக்ட்ரானிக்ஸ் சாதன உற்பத்தி மற்றும் பாகங்கள் உற்பத்தியில், உலகளாவிய தலைமையிடமாக மாறுவதற்கான இந்தியாவின் லட்சியத்தை முன்னெடுப்பதில் தமிழகம் உறுதியாக உள்ளது. தமிழகத்திலிருந்து, 100 பில்லியன் டாலர் அதாவது, 8.60 லட்சம் கோடி ரூபாய்க்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!