கூடுவாஞ்சேரி தி.மு.க., சார்பில் இஸ்லாமியருக்கு ரம்ஜான் பரிசு

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி நகரத்தில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு, தி.மு.க., சார்பில், ரம்ஜான் தொகுப்பு பரிசு பை நேற்று வழங்கப்பட்டது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகை ரம்ஜான், நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கூடுவாஞ்சேரி நகர தி.மு.க.,வினர் சார்பில், அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பத்தினர் அனைவருக்கும், 1,000 ரூபாய் மதிப்புள்ள, தொகுப்பு பரிசு பை நேற்று வழங்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள என்.பி.சி., மண்டபத்தில், நேற்று மாலை 4:30 மணிக்கு நடந்த இவ்விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரன் பங்கேற்று, பயனாளிகளுக்கு தொகுப்பு பரிசை வழங்கினார்.

ஒரு சேலை, வேட்டி, இனிப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்கள் பரிசு பையில் இடம் பெற்றிருந்தன. கூடுவாஞ்சேரி நகர தி.மு.க., செயலர் கார்த்தி, விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

Advertisement