அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா

வில்லியம்பாக்கம்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சங்கர் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அரவிந்தன் பங்கேற்றார்.
இந்த விழாவில், பங்கேற்ற பள்ளி மாணவ- - மாணவியர் கல்வி குறித்தும், கல்வியின் அவசியம் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக எடுத்துக் கூறினர்.
கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவ -- மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
Advertisement
Advertisement