ஸ்ரீபெரும்புதுாரில் பாழாகும் குப்பை சேகரிப்பு வாகனங்கள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள்உள்ளன. இதில், தண்டலம், மொளச்சூர், சிறு மாங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு, 2023 - 24ம் நிதி ஆண்டில், துாய்மை பாரத இயக்கம் மற்றும் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், தலா, 2.52லட்சம் மதிப்பில் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு, இம்மாதம் துவக்கத்தில் 11 குப்பை சேகரிப்பு பேட்டரி வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ள பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்கள், பயன்பட்டிற்கு முன்பாகவே வீணாகும் அவலநிலை உள்ளது.

எனவே, இவற்றை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளிடம் ஒப்படைக்க, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள்நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

 காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில், துாய்மை பணியை மேற்கொள்ள துாய்மை காவலர்களுக்கு 81 லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 32 பேட்டரி மின்கள வண்டி வழங்கும் விழா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்கொடி தலைமை வகித்தார். இதில், 13 ஊராட்சியை சேர்ந்த 32 துாய்மை காவலர்களுக்கு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது.

Advertisement