காரைக்காலில் இப்தார் நோன்பு முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

காரைக்கால்: காரைக்கால் ஜமாத் சார்பில், நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.

காரைக்கால் மாவட்ட ஜமாத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். பாரீஸ் நஜிம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்திக்கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் சந்திர பிரியங்கா, ரமேஷ், லட்சுமிகாந்தன், ஆறுமுகம், துணை சபாநாயகர் ராஜவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement