வைகை அணையில் பாசன நீர் திறப்பு
ஆண்டிபட்டி : மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 5 நாட்களுக்குப்பின் மீண்டும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களின் பாசனத்திற்காக டிச.18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து மார்ச் 23ல் அணையில் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 58.45 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement