மாநில கைப்பந்து போட்டி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: மாநில அளவிலான ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியினை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

புதுச்சேரி கைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவில் ஜூனியர் அணிக்கான சாம்பியன்ஷிப் போட்டி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது.

போட்டியினை புதுச்சேரி கைப்பந்து சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

போட்டியில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்று விளையாடுகின்றனர்.

நிகழ்ச்சியில், கைப்பந்து சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement