பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி: மின்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அன்பழகனுக்கு பாராட்டு விழா நடந்தது.

புதுச்சேரி மின்துறையில் நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய அன்பழகன் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பாராட்டு விழா மின்துறை கருத்தரங்க கூடத்தில் நடந்தது.

விழாவில் துறைத்தலைவர் ராஜேஷ் சேன்யல் தலைமை தாங்கி, பணி ஓய்வு பெற்ற அன்பழகனுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, வாழ்த்தினார். அன்பழகன் அரசின் 13 துறைகளில் பல பதவிகளை வகித்து 36 வருட அரசுப்பணியை திறம்படச் செய்து ஓய்வு பெற்றுள்ளார். விழாவில் அவரது குடும்பத்தினர், அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Advertisement