போலீஸ்துறையின் ஆண்டு மாநாடு

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ்துறையின் முதல் ஆண்டு மாநாடு கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடந்தது.

டி.ஜி.பி., ஷாலினி சிங் தலைமை தாங்கினார். ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு பேசுகையில், 'புதுவை மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும்.

புதுவை மாநிலம் அமைதி பூங்காவாக இருக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்றார். இதில் பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி நன்றி கூறினார்.

Advertisement