தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தில், தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் தர்ம மணிவேல், கோவிந்தராசு, ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், துணை அமைப்பாளர்கள் பால பாரதி, வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றனர்.

மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப சேனலை அறிமுகப்படுத்தி, அதனை பயன்படுத்தும் விதம் குறித்து பேசினார்.

கூட்டத்தில், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சத்தியராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்திரராஜன், ஜெகதீஸ்வரன், முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பழகன், கிளை செயலாளர் மணிகண்டன், பாட்ஷா, ஒன்றிய வர்த்தகரணி பிரபு, ஒன்றிய மாணவரணி ராஜிவ்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Advertisement