பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: கடலுாரில் கலெக்டர் ஆய்வு

கடலுார்: கடலுார் மாநகரில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முழுதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. கடலுார் மாவட்டத்தில் 437 பள்ளிகளில் இருந்து 17,384 மாணவர்கள், 15,570 மாணவிகள் என மொத்தம் 32,954 பேர் தேர்வு எழுது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலுார் மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதியதை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார். தொடர்ந்து, வேணுகோபாலபுரம் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வை ஆய்வு செய்தார்.
பின், அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், மாணவர்களின் நலன் கருதி குடிநீர் வசதி, கழிவறை, தடையில்லா மின்சார வசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இத்தேர்வானது தங்களுடைய எதிர்கால வாழ்வினை தீர்மானிக்கும் என்பதால் கவனமுடன் வினாத்தாள்களை படித்து நன்றாக தேர்வு எழுத வேண்டும்.
பொதுத்தேர்வினை எவ்வித அச்சமும் இன்றி, சிந்தனைகளை சிதற விடாமல் எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்' என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள 116 அரசு பள்ளி, 15 அரசு உதவிபெறும் பள்ளி, 9 ஆதிதிராவிடர் நல பள்ளி, 66 தனியார் பள்ளி என 206 பள்ளிகளில் பயிலும், 14,121 பேருக்கு 71 மையங்களில் தேர்வு நடந்தது. நேற்று நடந்த தமிழ் தேர்வில், 13,880 பேர் தேர்வு எழுதிய நிலையில், 241 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 142 தனித்தேர்வர்களுக்கு மூன்று மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அதிகாரி துரைப்பாண்டியன் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது