கூகுள் பேவில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்
கடலுார்: விபத்து வாகனத்தை சோதனைக்கு அனுப்ப கூகுள் பேவில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் முருகன்,54; கடந்த 21ம் தேதி இவரது பைக் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விபத்துக்குள்ளான வாகனத்தை, மோட்டார் வாகன ஆய்வாளர் சோதனைக்கு அனுப்புவதற்காக ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த பெண் போலீஸ் வசந்தி, கூகுள் பேவில் ரூ.200 லஞ்சம் வாங்கினார்.
இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.பி., ஜெயக்குமார் நடத்திய விசாரணையில், லஞ்சம் வாங்கியது உறுதியானதை தொடர்ந்து, வசந்தியை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement