கிரைம் செய்திகள்
கணவர் மாயம்: மனைவி புகார்
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த புத்தேரியைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 45; இவர் கடந்த 11ம் தேதி ஆவினங்குடி செல்வதாகக் கூறி சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி வளர்மதி அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
கல்லுாரி மாணவி மாயம்
கடலுார் : ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகள் பவித்ரா,21; தனியார் நர்சிங் கல்லுாரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் திலகவதி அளித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கார் மோதி 2 பேர் காயம்
வடலுார் : வடலுார், ஆபத்தாரணபுரம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கண்ணதாசன், 65; இவரது நண்பர் குப்புசாமி, 66.; இருவரும் நேற்று முன்தினம் சென்னை-கும்பகோணம் சாலையில் வடலூர் நோக்கி மொபட்டில் சென்றனர்.
அப்போது எதிரே வந்த இன்னோவா கார், மொபட் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த கண்ணதாசன், குப்புசாமி ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு
வடலுார் : வடலுார் அடுத்த, கருங்குழி காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி,45; முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது பைக்கில் அவரை வழிமறித்த மூன்று பேர், கத்தியால் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா, அஜய், சிவமணி ஆகியோர் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து
கடலுார் : தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலநாதன்,42; இவர் புதுச்சேரியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக தனது காரில் புதுச்சேரியில் இருந்து கடலுார் வந்தார். நள்ளிரவு 1:30மணிக்கு கடலுார் ஜவான்பவன் சாலையில் வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து கெடிலம் ஆற்றில் கவிழ்ந்தது. விபத்தில் கமலநாதன், காயமின்றி உயிர் தப்பினார்.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின், மீட்பு வாகனம் மூலம் கார் மீட்கப்பட்டது.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது